உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  50 பேர் பங்கேற்ற முகாமில் 300 பேர் ரத்தம் வழங்கியதாக கணக்கு பொதுமக்கள் புலம்பல்

 50 பேர் பங்கேற்ற முகாமில் 300 பேர் ரத்தம் வழங்கியதாக கணக்கு பொதுமக்கள் புலம்பல்

தா னத்தில் சிறந்தது ரத்த தானம். உயிர்களை காப்பாற்ற ஒவ்வொரு நபரும் ரத்த தானம் வழங்க முன் வர வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. பல தன்னார்வலர்களும் ரத்த தானம் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், சில கட்சிகள், அமைப்புகள் 10 பேர் ரத்த தானம் வழங்கிவிட்டு, 100 பேர் ரத்த தானம் வழங்கியதாக தம்பட்டம் அடித்து கொள்கின்றனர். அதன்படி, சமீபத்தில் அரசு மருத்துவமனையில் ஒரு கட்சி சார்பில் ரத்த தானம் முகாம் நடந்தது. இதில், 300 பேர் ரத்த தானம் வழங்கியதாக செய்தி வெளியானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு அவசராக ரத்தம் தேவைப்பட்டது. பாதிக்கப்பட்டவருக்காக அவரது உறவினர்கள், அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள ரத்த வங்கியில் ரத்த வகையை கூறி ரத்தம் கேட்டனர். ரத்தம் எதுவும் ஸ்டாக் இல்லை ரத்த வங்கி ஊழியர்கள் கூறினர். பாதிக்கப்பட்ட நபர் 300 பேர் ரத்தம் கொடுத்தாக செய்தி வந்துள்ளதே. அந்த ரத்தங்கள் எங்கே என கேள்வி எழுப்பினர். அப்போது, முகாமில் வந்ததே 50 பேர் தான். ஆனால், 300 பேர் ரத்தம் எப்படி கொடுக்க முடியும். அரசியல் கட்சிகள் கூறுவதை எல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள் என தெரிவித்தனர். அரசியல் கட்சி ரத்த தான முகாம் என நடத்தி 50 பேர் ரத்த தானம் வழங்க செய்துள்ளது. ஆனால், 300 பேர் வழங்கியதாக கட்சி தலைமைக்கு தகவல் அனுப்பியது தெரியவந்தது. இதை அறிந்த பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர், ரத்த தானம் வழங்குவதிலுமா உங்கள் கட்சி தில்லு முல்லுவை காண்பிப்பீர்கள் என புலம்பியபடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை