உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதுச்சேரி மதுபானம் கடத்தியவர் கைது

புதுச்சேரி மதுபானம் கடத்தியவர் கைது

விருத்தாசலம்; புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று மாலை பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டிராவல் பேக் எடுத்து வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அதில், சென்னை கொளத்துார் மக்காரம் தோட்டம் ராஜ்குமார், 46, என்பது தெரிந்தது. பையில் 750 மி.லி., உட்பட 12 வகையான புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது தெரிந்தது.எலக்ட்ரீஷியன் வேலை செய்து வரும் அவர் புதுச்சேரியில் பணி முடித்து விட்டு, பஸ்சில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, ராஜ்குமாரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை