உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாவட்டத்தில் மீண்டும் மழை: வடக்குத்தில் 98 மி.மீ., பதிவு

 மாவட்டத்தில் மீண்டும் மழை: வடக்குத்தில் 98 மி.மீ., பதிவு

கடலுார்: மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. வங்கக்கடலில் டிட்வா புயல் கரையை நோக்கி நகர்ந்து வந்ததையொட்டி கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் புயல் சென்னை கடற்கரை நோக்கி சென்றதால், மாவட்டத்தில் மழை குறைந்தது. புயல் சின்னம் வலுவிழந்து மீண்டும் சென்னை அருகே நிலை கொண்டிருந்ததால் கடலோரப்பகுதியில் மீண்டும் மழை பெய்யத் துவங்கியது. இதனால் கடலுாரில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8:30மணி முதல் நேற்று காலை 8:30மணி வரை பெய்த மழையளவு (மி.மீ): வடக்குத்து 98, விருத்தாசலம் 66, குப்பனத்தம் 62.2, வேப்பூர் 55, கடலுார் 52.7, கலெக்டர் அலுவலகம் 50.4, காட்டு மயிலுார் 49, சிதம்பரம் 43, வானமாதேவி 37, சேத்தியாதோப்பு 32.4, அண்ணாமலைநகர் 32, கீழ்ச்செருவாய் 32, கொத்தவாச்சேரி 31, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 30, பெலாந்துறை 28.4, மேமாத்துார் 28, லால்பேட்டை 23.9, ஸ்ரீமுஷ்ணம் 23.2, பண்ருட்டி23, குறிஞ்சிப்பாடி 23, புவனகிரி 19.6, காட்டுமன்னார்கோவில் 17, லக்கூர் 1 3.4, தொழுதுார் 5.8 மி.மீ., மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை