மேலும் செய்திகள்
மதுரை மண்டல அளவிலான கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு
07-Sep-2024
கடலுார்: முதல்வர் கோப்பைக்கான, மண்டல ஆளவிலான குத்து சண்டைப்போட்டி கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது.பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி, மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 10ம் தேதி துவங்கி நடக்கிறது. திருவண்ணாமலை மண்டலத்திற்கு உட்பட்ட கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கான குத்து சண்டை, கடற்கரை கையுந்து பந்து போட்டிகள் கடலுாரில் நடந்து வருகிறது. நேற்று பள்ளி மாணவர்களுக்கான குத்து சண்டைப் போட்டி கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் துவக்கி வைத்தார். இதில் 8 மாவட்டங்களை சேர்ந்த 200 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.
07-Sep-2024