உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிவாரண பொருட்கள்: எம்.எல்.ஏ., வழங்கல்

நிவாரண பொருட்கள்: எம்.எல்.ஏ., வழங்கல்

கடலுார்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, எம்.எல்.ஏ., நிவாரண பொருட்கள் வழங்கினார்.கடலுார் அடுத்த தோட்டப்பட்டு ஊராட்சியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, ஆயிரம் பேருக்கு அரிசி, புடவை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். ஊராட்சி தலைவர் கபிலன் முன்னிலை வகித்தார்.அப்போது, ஊராட்சி தலைவர் மனோகரன், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், வார்டு உறுப்பினர்கள் பானுமதி, மீனா மற்றும் நிர்வாகிகள் திருவேங்கடம், முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை