உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

கடலுார் மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப் பள்ளியில், 75வது குடியரசு தின விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, ஓய்வுபெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்து சுகுமார், தேசிய கொடி ஏற்றி வைத்தார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சேர்மன் தேன்மொழி சங்கர் தேசிய கொடியை ஏற்றினார். செயல் அலுவலர் திருமூர்த்தி வரவேற்றார். துணைச் சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணைச் சேர்மன் செழியன், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கடலுார்

கடலுார் துறைமுகம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் வரவேற்றார். நிறுவனர் சொக்கலிங்கம் தேசிய கொடியேற்றினார். விழாவில், தாளாளர் கஸ்துாரி, தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல் அலுவலர் லட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் சிவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.கடலுார், கே.என்.பேட்டை பவானி கல்வியியல் கல்லுாரி மற்றும் பவானி அம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பவானி ஜெயராம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஜெயராமன் தலைமை தாங்கினார். தலைவர் நாராயணன், செயலாளர் மகாலட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் நடந்த விழாவில் தெய்வசிகாமணி தேசிய கொடி ஏற்றினார். சேர்மன் கதிவரன் தலைமை தாங்கினார். முதல்வர் ஆனந்தவேலு முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாதன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலகர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

சேத்தியாத்தோப்பு

சேத்தியாத்தோப்பு எஸ்.டி.ஈடன் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் தீபக் தாமஸ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சுகிர்தா, சப் இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி முன்னிலை வகித்தார். அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மீனா தேசிய கொடியேற்றி பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடந்த விழாவில் நகரமன்ற தலைவர் ஜெயந்தி தேசிய கொடியேற்றினார். துணைத் தலைவர் கிரிஜா, பொறியாளர் பாரதி, மேலாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ