புவனகிரி பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வர கோரிக்கை
புவனகிரி: சிதம்பரத்தில் இருந்து சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும், புவனகிரி பஸ் நிலையத்திற்குள் சென்று வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரத்தில் இருந்து சேலம், விருத்தாசலம், நெய்வேலி, வடலுார், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பஸ்கள் புவனகிரி வழியாக இயக்கப்படுகிறது. ஆனால், இந்த பஸ்கள், புவனகிரி பஸ் நிலையத்திற்குள் வராமல் பாலக்கரை வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால் பயணிகள் பல மணி நேரம் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல தாமதம் ஏற்படுவதால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, அனைத்து பஸ்களையும் பஸ் நிலையற்குள் சென்று வர சிதம்பரம் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடடிக்கை எடுக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.