உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

சென்னை - கும்பகோணம் சாலை சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே 25 கண் மதகு ஷட்டர் பாலம் 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. பாலம் மிகவும் குறுகியதாக உள்ளதால் எதிர்வரும் வாகனங்கள் கடந்து செல்லும் வரை பல மணி நேரம் காத்திருந்து கடந்து செல்கின்றன. பாலத்தில் பல ஆ ண்டுகளாக மின் விளக்குகள் ஏதும் இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பாலத்தை அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, 25 கண் மதகு பாலம் அருகே குமார உடைப்பு வளைவு பாலம் உள்ள நிலையில் சென்னையிலிருந்து வரும் பஸ்கள் பாலத்திற்குள் நுழையும் போது விபத்துகளில் சிக்கிக் கொள்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !