உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீரில் கழிவுநீர் கலப்பு நோய் பரவும் அபாயம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு நோய் பரவும் அபாயம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் காலை, மாலை இரு வேளையும் மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்கின்றனர். இப்பகுதியில் சாலை விரிவாக்க பணியால் குடிநீர் குழாய் உடைந்து, கழிவுநீர் கலந்து வருகிறது. ரயில் நிலையம் அருகே நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாகிறது. அங்கு 24 மணி நேரமும் குடிநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ