உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ரூ.2 கோடியில் சாலை பணி துவக்கம்

 ரூ.2 கோடியில் சாலை பணி துவக்கம்

விருத்தாசலம்: கோட்டேரி - வீரட்டிக்குப்பம் இடையே உள்ள குறுகிய சாலையை, ரூ.2 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணிக்கான பூமிபூஜையை, அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார். விருத்தாசலம் - காட்டுக்கூடலுார் சாலையில், கோட்டேரி - வீரட்டிக்குப்பம் இடையே வனப்பகுதியில் உள்ள 3 மீட்டர் குறுகிய சாலையை, ரூ.2.5 கோடி மதிப்பில், 7 மீட்டர் சாலையாக அகலப்படுத்தும் பணிக்கான, பூமிபூஜை விழா நடந்தது. இந்த விழாவிற்கு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சாலை அகலப்படுத்தும் பணிக்கான பூமிபூஜையை துவக்கி வைத்தார். இதில், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சுரேஷ், வேல்முருகன், கனக கோவிந்தசாமி, காங்., கட்சி வட்டார தலைவர் சாந்தகுமார் மற்றும் தி.மு.க., - காங்., கட்சி நிர்வாகிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்