உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலைப் பணி கிடப்பில்; கிராம மக்கள் அவதி

சாலைப் பணி கிடப்பில்; கிராம மக்கள் அவதி

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சியில் இருந்து கீழக்கரை வழியாக கொள்ளிடக்கரை கிராமங்களாக முள்ளங்குடி, ஓற்றர்பாளையம், நலன்புத்துார், கருப்பூர், தீத்துக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் 2 கி.மீ., துார சாலை உள்ளது. இக்கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் கிராம மக்கள் சைக்கிள், இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்யும் வேளாண் விளை பொருட்களை ஏற்றி செல்ல இது முக்கிய சாலையாக உள்ளது. மேலும், இப்பகுதி கிராமங்களில் இருந்து குமராட்சி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் கிராம மக்கள், விவசாயிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.சாலை படுமோசமானதால், கடந்த ஓராண்டுக்கு முன், புதிய சாலை அமைக்க 1.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு சாலை பணி துவங்கியது. இச்சாலையில், மூன்று பாசன வாய்க்கால்கள் உள்ளன. இதில், இரண்டு பாசன வாய்க்கால்களில் சிறிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டது.மீதமுள்ள வாய்க்காலில் பெரிய பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டு, பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாற்றுப் பாதை அமைக்காததால், இப்பகுதி கிராம மக்கள், விவசாயிகள் கடும் அவதியடைகின்றனர்.தற்போது அறுவடை பணிகள் நடப்பதால், நெல் மூட்டைகளை எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். எனவே, சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீர் பாசனத்துறை

பி.டி.ஓ.,வுக்கு கடிதம்இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு பாலங்களில் பாசன நீர் செல்ல முடியாத அளவில் மிகவும் குறுகியதாக உள்ளது. அவ்வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை உள்ளது. அதனை மாற்றியமைத்து, சரியான முறையில் பாசன வாய்க்காலுடன் பாலம் அமைக்க வேண்டும் என, நீர் பாசனத்துறை சார்பில், குமராட்சி பி.டி.ஓ.,வு க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை