உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாமனபுரீஸ்வரர் கோவிலில் ரோகிணி தீபம்

 வாமனபுரீஸ்வரர் கோவிலில் ரோகிணி தீபம்

கடலுார்: திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. கடலுார் அடுத்த திருமாணிக்குழியில் பிரசித்தி பெற்ற வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பொதுவாக, சிவன் கோவில்களில் கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றப்படும். ஆனால், வாமனபுரீஸ்வரர் கோவிலில் மட்டும் பரணி நட்சத்திரத்துக்கு மறுநாள் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும். அதன்படி இக்கோவிலில் ரோகிணி தீபம் ஏற்றும் வழிபாடு நடந்தது. இதனையொட்டி வாமனபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, கோவில் முன்புறம் உள்ள மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோவில் அருகே வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைகள் கொளுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை