உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.4.62 கோடி கையாடல் விவகாரம்: திட்டக்குடியில் ரகசிய விசாரணை

ரூ.4.62 கோடி கையாடல் விவகாரம்: திட்டக்குடியில் ரகசிய விசாரணை

திட்டக்குடி : திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் நடந்த ரூ. 4.62 கோடி கையாடல் குறித்து வருவாய் துறை உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று ரகசிய விசாரணை நடத்தினர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் 2013 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ரூ. 4.62 கோடி கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்த புகாரின் பேரில், மாவட்ட குற்ற தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து தற்காலிக கணினி உதவியாளர் அகிலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர்.இந்நிலையில், இந்த மோசடியில் அரசு அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வருவாய்த்துறை செயலாளர் உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று சென்னையில் இருந்து வந்த 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த ரகசிய விசாரணை காரணமாக திட்டக்குடி தாலுகா அலுவலக அதிகாரிகளிடையே பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை