உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 87,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல்

ரூ. 87,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல்

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடியில் டாட்டா ஏஸ் வாகனத்தில் குட்கா பொருட்கள் கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்தனர். ரூ.87 ஆயிரம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று முன்தினம், மெயின்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் 12 மூட்டைகளில் இருந்தது.அதையடுத்து, குட்கா கடத்தி சென்ற திட்டக்குடி, பெரியார் நகரை சேர்ந்த செந்தில், 38, என்பவரை போலீசார் கைது செய்து வாகனம் மற்றும், ரூ. 87 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருடகளை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி