உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., அனல்மின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

என்.எல்.சி., அனல்மின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

நெய்வேலி: என்.எல்.சி., மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில், ஆபத்தான சூழலில் செயல்படுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.என்.எல்.சி., முதல் அனல்மின் நிலைய சேவை கட்டட வளாகத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., சிவக்குமார் தலைமை தாங்கினாார். என்.எல்.சி., இயக்குநர்கள் சுரேஷ் சந்திரசுமன், வெங்கடாசலம், சமீர் ஸ்வரூப் முன்னிலை வகித்தனர். சீனியர் கமாண்டர் நவதீப் சிங் ஹீரா வரவேற்றார்.என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி முதன்மை விருந்தினராக பங்கேற்று, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பேரிடர் காலங்களில் மட்டுமின்றி, ஆபத்தான சூழலில் பொதுமக்களை காப்பாற்றும் வகையில் செயல்படும் அனைத்து வீரர்களையும் பாராட்டி பேசினார்.தொடர்ந்து, அரக்கோணம் 4 வது தேசிய பேரிடர் பட்டாலியன், தமிழ் நாடு போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் பங்கேற்ற, பேரழிவு மீட்பு நடவடிக்கைள் குறித்து செயல்விளக்க ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது.மத்திய தொழிலக பாதுகாப்பு படை கமாண்டர் வினோத் சபாடே, துணை கமாண்டர் சுதாகர், குறிஞ்சிப்பாடி தாசில்தார் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை