உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஜேந்திர பெருமாள் கோவிலில் 22ம் தேதி சம்ப்ரோக் ஷணம்

கஜேந்திர பெருமாள் கோவிலில் 22ம் தேதி சம்ப்ரோக் ஷணம்

கடலுார்: கடலுார் ஜட்ஜ் பங்களா சாலை, கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் சம்ப்ரோக் ஷணம் வரும் 22ம் தேதி நடக்கிறது. கடலுார் ஜட்ஜ் பங்களா சாலை, கமலவல்லி தாயார் சமேத கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவில் சம்ப்ரோக் ஷணத்தை முன்னிட்டு நாளை 20ம் தேதி காலை 7:30 மணிக்கு அனுக்ஞை, பெண்ணையாற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், கும்ப பூஜை, 10:30 மணிக்கு பூர்ணாகுதி, சாற்றுமறை நடக்கிறது.21ம் தேதி காலை 9:00 மணிக்கு யாக சாலை, மூன்றாம் கால ேஹாமம், அஷ்டபந்தனம் சாற்றுதல், மாலை 5:00 மணிக்கு நான்காம் கால ேஹாமம் நடக்கிறது.22ம் தேதி காலை 7:30 மணிக்கு கோ பூஜை, திருப்பள்ளி எழுச்சி, 8:00 மணிக்கு ஐந்தாம் கால ேஹாமம், சாந்தி ேஹாமம், யாத்ராதானம், 10:00 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் சம்ப்ரோக் ஷணம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ