துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
புவனகிரி : கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலாளர் பாலசங்கர் வரவேற்றார். பி.டி.ஓ., (திட்டம்) ஆனந்தன், இன்ஜினியர் பூவராகவன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., (நிர்வாகம்) பார்த்திபன் தேசியக்கொடியேற்றி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, துணை பி.டி.ஓ., சபிதா சேவையை பாராட்டி பேசினார். சிறப்பாக பணியாற்றிய கந்தகுமாரன் மற்றும் வடஹரிராஜபுரம் கிராம ஊராட்சிகளை சேர்ந்த துாய்மை பணியாளர்கள் 10 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முதுநிலை அலுவலர் பாலசுப்பரமணியம் நன்றி கூறினார்.