உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

புவனகிரி : புவனகிரி பெருமாத்துார் இலுப்பை குளக்கரையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.சிதம்பரம் இயற்கை பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அதன் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சீனுவாசன், தில்லைகோவிந்தன், சிதம்பரம், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். சிவப்பிரகாசம் வரவேற்றார். தலைமையாசிரியர் குமரேசன், மரக்கன்றுகளை நட்டு, பணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் இளஞ்செழியன், சுப்பராயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இலுப்பை குளத்தில் குப்பை போடாமல் பாதுகாக்க குப்பைத்தொட்டி அமைப்பது, குளக்கரையை பலப்படுத்தி தூய்மை பணி மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.ஏற்பாடுகளை சிதம்பரம் இயற்கை பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் பழனி உள்ளிட்டோர் செய்திருந்தனர். தனஞ்செயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ