உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடவு பயிருக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்ஜின் மூலம் இறைக்கும் அவலம்

நடவு பயிருக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்ஜின் மூலம் இறைக்கும் அவலம்

புவனகிரி : புவனகிரி அடுத்த கீழமூங்கிலடி அம்பலத்தடிகுப்பம் பகுதியில் சம்பா நடவு பயிருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்ஜின் மூலம் இறைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.மேல்புவனகிரி அடுத்த கீழமூங்கிலடி ஊராட்சி அம்பலத்தடிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி நீர் கொண்டு மணிமேகலை வாய்க்கால் மூலம் சுற்று பகுதியினர் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்த ஆண்டிற்கு நடவு செய்த நிலையில் தற்போது வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால், ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரை வாய்க்காலில் குழி தோண்டி இன்ஜின் மூலம் நீர் எடுத்து வயலுக்கு பாய்ச்சும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !