உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாரி மோதி பள்ளி மாணவர் பலி; மந்தாரக்குப்பத்தில் சாலை மறியல்

லாரி மோதி பள்ளி மாணவர் பலி; மந்தாரக்குப்பத்தில் சாலை மறியல்

மந்தாரக்குப்பம் : நெய்வேலியில், பைக்கில் சென்ற பள்ளி மாணவர், லாரி மோதி இறந்தார்.நெய்வேலி அடுத்த ஆதாண்டார்கொல்லையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் சதீஷ்குமார்,15; இவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர் நந்து,18; என்பவருடன், பைக்கில் வடலுார் தைப்பூசத்திற்கு சென்றுவிட்டு, மாலை 3:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன், நெடுஞ்சாலையில் வந்தபோது, அவ்வழியாக நிலக்கரி ஏற்றி சென்ற லாரி மோதியது. அதில் லாரி சக்கரத்தில் சிக்கிய சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக் ஓட்டிய நந்து லேசான காயங்களுடன் தப்பினார்.தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சதீஷ்குமாரின் உறவினர்கள், கடலுார்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் 4:15 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி., சபியுல்லா நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று மாலை 5 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கடலுார்-விருத்தாசலம் சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை