உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட, டிப்பர் லாரியை சுரங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று விருத்தாசலம் காய்கறி மார்க்கெட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், கள்ளத்தனமாக கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.அதன்பின் லாரியை பறிமுதல் செய்த சுரங்க துறை அதிகாரிகள் விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை