மேலும் செய்திகள்
அரசுப் பள்ளி மாணவிக்கு விருது
22-Jun-2025
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். ஆசிரியை மகாலட்சுமி வரவேற்றார். ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் லதா, வளர் இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார். வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் சிறுதானிய உணவுகளின் பயன்கள், ரத்த சோகை குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
22-Jun-2025