கிருஷ்ணசாமி கல்லுாரியில் கருத்தரங்கு
கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் ட்ரோன் கண்டுபிடிப்பு மற்றும் விண்வெளியில் தொழில் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு சார்பில் நடந்த கருத்தரங்கில் கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன், செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினர். முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினர் வாயு சாஸ்திர ஏரோஸ்பேஸ் பிரைவேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெகதீஷ் கண்ணா, ட்ரோன் கண்டுபிடிப்பு குறித்து பேசினார். ஏற்பாடுகளை துணை பேராசிரியர்கள் விஜயசாரதி, தமிழரசி செய்திருந்தனர்.