உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பல்கலையில் கருத்தரங்கம்

பல்கலையில் கருத்தரங்கம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பாலியல் சமத்துவம் பற்றிய மூன்று நாள் கருத்தரங்கம் நடந்துது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்பதுார் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து, பாலியல் சமத்துவம் பற்றிய மூன்று நாள் பயிலரங்ககை நடத்தியது. நிறைவு விழா மக்களியல் துறையில் நடந்தது. நிகழ்ச்சியில் அஜிஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். மக்களியல் துறைத் தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கி பேசினார். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல் நிறைவுரையாற்றினார்.விழாவில் அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் கல்பனா வாழ்த்துரை வழங்கி பேசுகையில், மொபைல் போன் வழியாக நடைபெறும் இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உதவிப் பேராசிரியர் மகேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை