உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மூத்தோர் தடகள சங்க கூட்டம்

 மூத்தோர் தடகள சங்க கூட்டம்

கடலுார்: கடலுார் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு சங்கத்தின் மாதாந்திர கூட்டம் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. துணைத் தலைவர் திருமலை தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். தெற்கு ஆசிய நாடுகள் இடையே நடந்த நடை போட்டியில் மூன்றாமிடம் பிடித்த குணசேகரன், சங்கிலி குண்டு எறிதலில் மூன்றாமிடம் பிடித்த வேம்பாயி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நடராஜன், தர்மலிங்கம், தலைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் சுபாஷ் பாபு பேசினர். திருஞானம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ