| ADDED : மார் 10, 2024 06:08 AM
பெண்ணாடம் : பெண்ணாடம் பகுதி கோவில்களில் நடந்த மகா சிவராத்திரி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மகா சிவராத்திரியையொட்டி, பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 9:00 மணியளவில் முதல் கால பூஜையும், அதைத்தொடர்ந்து மூன்று கால பூஜைகளும் நடந்தது.இதேபோன்று, இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் சந்திர மவுலீஸ்வரர், மாளிகைக்கோட்டம் ஆனந்த மாளிகேஸ்வரர் கோவில்களில் இரவு 9:00 மணியளவில் முதல் கால மகா சிவராத்திரி சிறப்பு 108 சங்காபிஷேகம் மற்றும் 4ம் கால பூஜையில் பஞ்சமுக அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, பஞ்சமுக மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.