மேலும் செய்திகள்
தேசிய ஊட்டச்சத்து வார விழா போட்டி
18-Sep-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. விருத்தாசலம் அடுத்த இருப்பு மற்றும் ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நடந்த பயிற்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் வசந்தா, விசாலாட்சி, கமலக்கண்ணன், மாயகிருஷ்ணன் உட்பட 40 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைத்தல், மாடித்தோட்டம் வடிவமைத்தல், மண்புழு உரம் தயாரிப்பு, அசோலா வளர்ப்பு, நாற்று உற்பத்தி, நாற்றகாங்கால் பராமரிப்பு, முந்திரி மற்றும் பலாவின் மென் தட்டு ஒட்டு கட்டுதல், விதைநேர்த்தி, விதை உற்பத்தி மற்றும் இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு, இயற்கை ஊட்டச்சத்து இடுபொருட்கள் தயாரிப்பு, மதிப்பு கூட்டுதல், பண்ணைக் கழிவு மேலாண்மை, மூலிகை தாவரங்கள் பராமரிப்பு ஆகிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தரப்பட்டது.
18-Sep-2025