மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத பிணம்
10-Apr-2025
புதுச்சத்திரம் : மாமியாரை அம்மிக் குழவியால் தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி அடுத்த கீழமணக்குடி பிள்ளைகுளம் தெருவை சேர்ந்தவர் குமார், 45; கொத்தனார். இவரது மனைவி வசந்தி, 42; கணவர் குமாரை பிரிந்து, வசந்தி கடந்த மூன்று ஆண்டுகளாக, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இந்நிலையில் பெரியப்பட்டு வந்த குமார், மாமியார் பாப்பாத்தி, 60; வீட்டிற்கு சென்று துாங்கிக் கொண்டிருந்த அவரை அம்மிக் குழவியால் தாக்கினார். இதில், படுகாயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
10-Apr-2025