உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் கடத்தல் எஸ்.பி., சோதனை

மதுபாட்டில் கடத்தல் எஸ்.பி., சோதனை

கடலுார் : புதுச்சேரி மாநில மதுபாட்டில் கடத்தலை தடுக்க எஸ்.பி., தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.கடலுார் ஆல்பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு சோதனைசாவடியில் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் அதிரடிப்படை போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து பஸ், ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடத்தி வந்த சாராயம், மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, கீழே கொட்டி அழித்தனர். மேலும், மதுபாட்டில்கள் கடத்தியவர்கள் மீது கடலுார் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !