உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு 

போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு 

கடலுார்: கடலுார் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு செய்தார். கடலுார் மாவட்ட எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற ஜெயக்குமார், நேற்று முன்தினம் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குற்ற சம்பவ பதிவேடு, ஆயுதக் கிடங்கை ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், வாரண்ட் நிலுவையில் உள்ள குற்றவாளிகளை பிடித்து ஆஜர்படுத்த ஆலோசனை வழங்கினார்.தொடர்ந்து சாராயம், கஞ்சா விற்பனையை தடுக்கவும், சான்றோர்பாளையத்தில் நடந்த சங்கர் கொலை வழக்கின் தற்போதைய நிலை, குற்றவாளிகளை உடன் கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ரேவதி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி