போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு
கடலுார்; மூன்று ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மோட்டார் பைக்கை கண்டுப்பிடித்த பெண்ணாடம் போலீசாருக்கு எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.பெண்ணாடத்தில் கடந்த 16ம் தேதி, எஸ்.ஐ. பாக்யராஜ், ஏட்டு கோபாலகிருஷ்ணன் இருவரும் வாகன சோதனை செய்தனர். அப்போது, அந்த வழியாக வந்த நபர், பைக்கை போட்டுவிட்டு தப்பிசென்றார். பைக் குறித்த விபரங்களை இ-பீட் ஆப்பில் பதிவேற்ற செய்ததில், அது, 2022ம் ஆண்டு, சேலம் அரசு மருத்துவமனை காணாமல் போனது என, தெரியவந்தது. இதனை சேலம் போலீசாருக்கு தெரியப்படுத்தி, பைக் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.அதையடுத்து, துப்பு துலக்கிய எஸ்.ஐ., பாக்கியராஜ், ஏட்டு கோபாலகிருஷ்ணன் இருவரையும் எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டி, பரிசு வழங்கினார். டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் உடனிருந்தார்.