உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வேப்பூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

 வேப்பூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

வேப்பூர்: வேப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நேற்று நடந்தது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், விடுபட்டவர்களுக்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேப்பூர் தாலுகாவில், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. வாக்காளர்களின் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, இடமாற்றம் உள்ளிட்டவைக்கு படிவங்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட்டது. வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல் ஆய்வு செய்தார். அப்போது, தேர்தல் துணை தாசில்தார் குமாரகிருஷ்ணன் உடனிருந்தார். அதேபோல், கடலுார் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமையிலான அ.தி.மு.க.,வினர் முகாம்களை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை