உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு  

எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு  

பெண்ணாடம் : பெண்ணாடம் எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்ணாடம், கிழக்கு வாள்பட்டறை எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி நேற்று காலை அம்மனுக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு வளையல் அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. பிரசாதமாக வழங்கப்பட்ட வளையல்களை சுமங்கலி பெண்கள் அணிந்து, அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மகாதேவி உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை