உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

புவனகிரி : புவனகிரியில், கண்ணதாசன் பேரவை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த போட்டியில், பேரவை தலைவர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட 18 பள்ளிகளில் இருந்து 102 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.கீழ்நிலை, நடுநிலை, உயர்நிலை என மூன்று வகையான பரிசுக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பூவாலை அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் ஊக்கப் பரிசாக புத்தகம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை