உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஸ்ரீ முருகன் ராயல் சிட்டி மனைப்பிரிவு திறப்பு

 ஸ்ரீ முருகன் ராயல் சிட்டி மனைப்பிரிவு திறப்பு

கடலுார்: பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்துாரில் ஸ்ரீ முருகன் ராயல் சிட்டி மனைப்பிரிவு திறப்பு விழா நடந்தது. அரசூர்-பண்ருட்டி, கடலுார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மனம்தவிழ்ந்தபுத்துார் ஊராட்சியில் வி.ஜி.எஸ்., விடியல் குரூபசின், ஸ்ரீ முருகன் ராயல் சிட்டி மனைப் பிரிவு திறப்பு விழா நடந்தது. உரிமையாளர்கள் சபரி, பாபு, செந்தில், பிரபா ஆகியோர் மனைப்பிரிவை திறந்து வைத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 'இங்கு, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், திருமண மண்டபம், ஓட்டல் அமைக்க விசாலமான இடம் உள்ளது. 30, 24 அடி அகல சிமெண்ட் சாலை வசதி, அனைத்து தெருக்களிலும் தெருமின் விளக்கு வசதி, தரமான குடிநீர் வசதி, மனைப்பிரிவை சுற்றிலும் பாதுகாப்பான மதில் சுவர், இரும்பு கேட் வசதிகள் உள்ளன. மனைப்பிரிவு அருகில் புதுப்பேட்டை நகரம், வர்த்தக நகரான பண்ருட்டி, அரசூர் ஜங்ஷன், பெட்ரோல் பங்க், 24 மணி நேர பஸ் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கனவு இல்லத்திற்கான சிறந்த இடம். அலுவலகம் மனை பிரிவிலேயே உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்