உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் இன்று ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

கடலுாரில் இன்று ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

கடலுார், : கடலுார் கூத்தப்பாக்கம் பக்ஷி கோபாலன் செட்டியார் திருமண மண்டபத்தில், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் இன்று (5ம் தேதி) மாலை 5:00 மணிக்கு நடக்கிறது.அதனையொட்டி, ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் என்கிற ரங்க மன்னார் மற்றும் கோதை நாச்சியார் என்கிற ஆண்டாள் சாமிகள் எழுந்தருள செய்யப்பட்டு, திருக்கல்யாண உற்சவசம் நடக்கிறது. இதில், கலந்துகொள்ளும் அனைவருக்கும் சங்கல்பம் செய்யப்படுகிறது. மேலும், ஜி.ஆர்.கே., எஸ்டேட் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை ஸ்ரீ உடையவர் சபா நிர்வாகிகள் பொறியாளர் சந்தானகிருஷ்ணன், அனந்தாழ்வார், கிேஷார், தாமோதரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ