உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரி வளாகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமை தாங்கினார். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். நகரமைப்பு அலுவலர் செல்வம் வரவேற்றார். நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முகாமை துவக்கி வைத்தார். நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், கருணாநிதி, மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளுக்கு 5, 12, 13 வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை