உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கழிவறை பணி தடுத்து நிறுத்தம்; விருதை பஸ் நிலையத்தில் பரபரப்பு

கழிவறை பணி தடுத்து நிறுத்தம்; விருதை பஸ் நிலையத்தில் பரபரப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் பஸ் நிலையத்தில், நகராட்சி சார்பில் 1.28 லட்சம் ரூபாயில் புதிதாக கழிவறை கட்டும் பணி நேற்று நடந்தது.இதையறிந்த அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து, பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது, 'இங்குள்ள படிக்கட்டு வழியாக ஆலடி சாலையில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், கடைகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு கழிவறை கட்டினால் பெண்கள், மாணவிகள் பாதுகாப்பாக சென்று வர முடியாது.எனவே, மாற்று இடத்தில் கழிவறை கட்டுங்கள்' என கூறினார்.அவர்களிடம் இன்ஸ்பெக்டர் முருகேசன், நகராட்சி பொறியாளர் சசிகுமார் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், திறந்தவெளியாக இல்லாமல், மேற்கூரை அமைப்பதால் எந்த பிரச்னையும் வராது என அதிகாரிகள் உறுதியளித்தனர்.இருப்பினும் பெண்கள் சமாதானம் அடையாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, நேற்று தற்காலிகமாக பணியை நிறுத்திவிட்டு, நகர்மன்ற சேர்மனிடம் தகவல் தெரிவித்து பணியை தொடர முடிவு செய்யப்பட்டது. கழிவறை கட்டும் பணியை பெண்கள் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை