உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், கூ டுதல் பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி தெருவில், ஊரா ட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. பரங்கிப்பேட்டை சுற்று வட்டார பகுதியில் இருந்து 123 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு ஒரு பள்ளி கட்டடம் சேதமடைந்ததால், இடிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆறு ஆண்டாக புதிய பள்ளி கட்டடம் கட்டித்தரப் படவில்லை. தற்போது, இரண்டு வகுப்பறை கட்டடத்திலேயே 1ம் வகுப்பு முதல் 8ம் வரை உள்ள மாணவர்கள் படித்து வருவதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கூடுதல் பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி, பள்ளி மேலாண்மைக்குழுவினர் மற்றும் பெற்றோர்கள் சார்பில்கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக் கணிப்பு செய்தனர். கல்வி அதிகாரிகள் கூடுதல் பள்ளி கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் மறுநாள், மாணவர்களை பள்ளிக்குஅனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித்தரக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்தனர்.இதுபற்றி தகவலறிந்த, பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் உமாராணி, பள்ளிக்கு வந்து பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கூடுதல் பள்ளி கட்டட ம் கட்டும் பணி துவங்கினால் மட்டுமே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்போம். இல்லை என்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கூடுதல் பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி மாணவர்கள், பள்ளிக்கு வராததால் பள்ளி வளாகம் வெறிச்சோடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை