| ADDED : ஜூலை 01, 2024 06:39 AM
பாடத் தேர்வுக்கு விளக்கம் கிடைத்ததுஇன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள், எந்த கல்லுாரி சிறந்த கல்லுாரி, எந்த கல்லுாரியில் சேர வேண்டும் என்ற தெளிவான விளக்கம் கிடைத்தது. எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என கல்வி ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியது பயனுள்ளதாக இருந்தது. -முகமது அப்பாஸ், பி.முட்லுார். அனைத்திற்கு விளக்கம் கிடைத்ததுஐ.இ.எஸ்., நுழைவுத் தேர்வு குறித்து தெளிவான விளக்கம் அளித்தனர். இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள், எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது குறி்த்து ஆலோசனை வழங்கப்பட்டது. 4 ஆண்டு கால இன்ஜினியரிங் படிப்பில் என்னென்ன விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என விளக்கம் அளித்தனர். -தருண்பாரதி, கடலுார்.கவுன்சிலிங் குழப்பம் நீங்கியதுஐ.இ.எஸ்., நுழைவுத் தேர்வு குறித்தும், எதிர்காலத்தில் எந்த பாடப்பிரிவை படித்தால் வேலை கிடைக்கும் என தெரிந்து கொண்டேன். கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து தெளிவான விளக்கம் கிடைத்ததால் குழப்பம் நீங்கியது. எந்ததெந்த பாடப்பிரிவுக்கு எந்தெந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விளக்கம் கிடைத்தது. -சுதர்சன், விருத்தாசலம்.