மேலும் செய்திகள்
நீரின்றி கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
30-Sep-2024
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் வடிகால் வசதியின்றி, சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள மாளிகைக்கோட்டம், அரியராவி, திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், தாழநல்லுார், காரையூர், வெண்கரும்பூர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் சம்பா நெல் நடவு செய்திருந்தனர். நெற்பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன.சில நாட்களுக்கு முன் பெய்த தொடர்மழை காரணமாக, பெண்ணாடம், அரியராவி, மாளிகைக்கோட்டம், இறையூர், கொத்தட்டை, பெ.கொல்லத்தங்குறிச்சி, திருமலை அகரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள தாழ்வான விளைநிலங்களில் வடிகால் வசதி இல்லாததால் மழை விட்டும், தண்ணீர் குளம்போல் இதுநாள் வரை தேங்கி நிற்கிறது. நெற்பயிர்கள் நீரில் அழுகும் நிலை தொடர்வதால் பெண்ணாடம் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
30-Sep-2024