உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சர்க்கரை ஆலை ஊழியர் வாகனம் மோதி பலி

சர்க்கரை ஆலை ஊழியர் வாகனம் மோதி பலி

விருத்தாசலம்; அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சர்க்கரை ஆலை ஊழியர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனுார் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 52; இவர், சேத்தியாத்தோப்பில் உள்ள சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அவர் விருத்தாசலத்தில் இருந்து கோ.ஆதனுார் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை