மேலும் செய்திகள்
கோடைகால மல்லர் கம்பம் பயிற்சி முகாம் நிறைவு விழா
02-Jun-2025
கடலுார்; பண்ருட்டி அடுத்த திருவதிகையில் மாமல்லன் பாரம்பரிய விளையாட்டு கலைக்கூடத்தில் இரண்டாம் ஆண்டு கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் சண்முகம், தமிழ்நாடு மல்லர் கம்ப கழக தலைவர் ஜனார்த்தனன், வழக்கறிஞர் விக்கி, கோபிகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினர். மாவட்ட மல்லர் கம்ப கழக நிர்வாகிகள் தலைவர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் அசோகன், பொதுச் செயலாளர் கார்த்திக், இணை செயலாளர் கலைவாணன், கலைக்கூட நிறுவனர் பாபு, பயிற்சியாளர்கள் கோபிநாத், கிரிஜா, விக்கி, பிரசாந்த் உடனிருந்தனர்.
02-Jun-2025