உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகளுக்கு பழச் செடிகள் வழங்கல்

விவசாயிகளுக்கு பழச் செடிகள் வழங்கல்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வட்டார விவசாயி களுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் பழச்செடிகள் வழங்கப்பட்டது.அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் மா, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, சீத்தா பழச்செடிகள் கொண்ட தொகுப்பு, 75 சதவீத மானியத்தில், முட்டம் பகுதியில் வழங்கப்பட்டது.முட்டம் ஊராட்சி தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு பழக்கன்றுகள் வழங்கினார்.துணைத் தலைவர் தமோதரன், தோட்டக்கலை உதவி இயக்குநர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அருள்செல்வன், பாலாஜி நாகேந்திரன் ஏற்பாடு செய்தனர்.கிராம நிர்வாக அலுவலர் ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ