உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசுப் பள்ளியில் இனிப்பு வழங்கல் 

அரசுப் பள்ளியில் இனிப்பு வழங்கல் 

புவனகிரி: புவனகிரி அருகே சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தீபாவளியை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளிகளுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசு வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். பள்ளி மாணவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சிதம்பரம் தொழிலதிபர் சண்முக சுந்தரம் தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, பட்டாசு மற்றும் புத்தாடை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆலய கிரிவல நிகழ்ச்சி அமைப்பினர் சுதர்சன், நடராஜன், ஆதிலட்சுமி இலியாஸ்பாஷா உள்ளிட்ட பலர் உடன் இணைந்து வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !