உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  டேக்வாண்டோ போட்டி; மாணவர்கள் அசத்தல்

 டேக்வாண்டோ போட்டி; மாணவர்கள் அசத்தல்

கடலுார்: கடலுாரில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அசத்தினர். புவனகிரி தாலுகா, பெரியகுமட்டி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் தருண்சஞ்சய், அஸ்வின்குமார், ரித்தீஷ், கதிரேஷ் ஆகியோர் கடலுாரில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் நடந்த மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டனர். இதில், மாணவர்கள் அனைவரும், 3ம் பரிசு பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களை பெரியகுமட்டி கிராமத்தை சேர்ந்த பரமானந்தம் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். பெரிய குமட்டி டேக்வாண்டோ கிளப் பயிற்சியாளர் அருண்குமார் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ