உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில துணை தலைவர் இக்பால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஷேக்நுார்தீன், துணை செயலாளர் ஜலாலுதீன், இளைஞரணி செயலாளர் அப்துல் அப்பாஸ் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயலாளர் கியாசுதீன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் மாநில பொருளாளர் சண்முகராஜா, செயலாளர் அப்துல் ஜப்பார் கருத்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் முஸ்தபா, துணை செயலாளர்கள் முஹம்மது யூனுஸ், ஜாகீர் உசேன், சட்டசபை தொகுதி செயலாளர்கள் செய்யது அகமது, அக்பர் அலி, முஹம்மது அலி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், உளுந்துார்பேட்டையில் இருந்து மங்கலம்பேட்டை, லால்பேட்டை வழியாக காட்டுமன்னார்கோவிலுக்கு பஸ் இயக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருத்தாசலம் சட்டசபை தொகுதி செயலாளர் சையது ரிபாய் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை