உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

கடலுார் : அரசு பஸ்சில் இரண்டரை கிலோ கஞ்சா பாக்கெட்டுக்கள் கடத்தி வந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கடலுார் ஆல்பேட்டை மதுவிலக்கு சோதனை சாவடியில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் குணா, கார்த்திகேயன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ்சில் இரண்டுபேர், இரண்டரை கிலோ கஞ்சா பாக்கெட்டுக்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், விருத்தாசலம் அடுத்த வீனங்கேனியை சேர்ந்த ஜோதி மகன் சூர்யா, 23; அசோத்தி மகன் ராமர், 23; என்பது தெரியவந்தது.இதை தொடர்ந்து, கஞ்சா பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்து, இருவரையும் கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, சூர்யா, ராமர் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை