உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் உண்டியல் திருட்டு

கோவில் உண்டியல் திருட்டு

விருத்தாசலம்; கோவில் உண்டியல் காணிக்கையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலம், ஆலடி காலனி அருகே உள்ள விவசாய நிலத்தில், கோவில் உண்டியல் ஒன்று உடைந்த நிலையில் நேற்று கிடந்தது. தகவலறிந்த ஆலடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உண்டியலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், ஆலடி காலனி கங்கை மாரியம்மன் கோவில் உண்டியல் என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கன்னியங்குப்பம் கிராமத்தில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அன்றிரவே இந்த கோவில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடியதும் தெரிந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி