உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மொபைலில் பேசிய முதல்வர்: உடன்பிறப்புகள் உற்சாகம்

 மொபைலில் பேசிய முதல்வர்: உடன்பிறப்புகள் உற்சாகம்

தமிழகத்தில், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடந்து வருகிறது. அந்த வகையில், சிதம்பரம் சட்டசபை தொகுதியில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில், தி.மு.க., நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.பூத் ஏஜெண்ட் மற்றும் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் வீடு, வீடாக சென்று ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்வழங்கியுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்பு ஏற்படுத்திமனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். அதைதொடர்ந்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளில் மனுக்கள் ஸ்கேன்செய்யப்பட்டுள்ள விவரங்களை தி.மு.க., மாவட்ட தலைமைக்கு வாட்ஸ் ஆப் மூலம் தினமும் அப்டேட்செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், சிதம்பரம் தொகுதியில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களிடம் மொபைல்போனில் பேசி உள்ளார். அவர், நான் தலைவர் பேசுகிறேன் என ஆரம்பித்து, நிர்வாகிகளிடம் நலம் விசாரித்துவிட்டு, வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து எவ்வளவுபடிவங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன; மீதியுள்ள படிவங்களை விரைந்து 'அப்டேட்' செய்ய வேண்டும்; என புள்ளி விவரங்களை நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார். இதனால், சிதம்பரம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., நிர்வாகிகள் மகிழச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை